in

அரசு பேருந்துகள் இயக்கப்படுவதுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்பட்டு வருவதாக நெல்லையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை மிகுந்த நெருக்கடியில் இருந்து தமிழ்நாட்டில் மகளிர் விடியல் பயணத்தை தமிழக முதலமைச்சராக அறிவித்து அதற்கான பணத்தை தந்து கொண்டிருப்பதால் தான் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடிகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவிலான அரசு பேருந்துகள் இயக்கப்படுவதுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்பட்டு வருவதாக நெல்லையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக வழங்கப்பட்டுள்ள 27 பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நெல்லை பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் சிவசங்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியை செய்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பேருந்தில் சட்டப்பேரவை தலைவர் ,அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.

முன்னதாக நிகழ்ச்சிகள் பேசிய அமைச்சர் சிவசங்கரன் போக்குவரத்து துறை சிரமமான சூழலுக்கு சென்ற நிலையில் தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அதனை மீட்டு மீண்டும் புத்துயிர் ஊட்டியுள்ளார். போக்குவரத்து துறை மிகுந்த கடன் சூழலில் இருந்த நிலையில் மகளிர் விடியல் பயணத்தை தமிழக முதலமைச்சர் அறிவித்து அதற்கான பணத்தை அரசு தரும் நிலையில் தான் தொழிலாளர்களுக்கு மாதம் மாதம் ஊதியம் கொடுக்க முடிந்து வருகிறது. டீசல் மானியம் இலவச பேருந்து பயணத்திற்கான மானியம் ஆகியவையால் தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட வருகிறது பிற மாநிலங்களில் 20% பேருந்துகள் கூட அரசின் மூலம் இயக்கப்படுவது கிடையாது. தமிழகத்தின் குக் கிராமம் வரை பேருந்துகள் அரசின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது கடந்த திமுக ஆட்சி நடந்த ஐந்தாண்டுகளில் அரசு சார்பில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது .

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி நடந்த போது வாங்கிய பேருந்துகளில் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாகவே பழைய பேருந்துகளை வைத்து தற்போது ஓட்டும் நிலை உள்ளது. நெல்லை மண்டலத்தில் புதிதாக 199 பேருந்துகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 144 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை மண்டலத்திற்கு புதிதாக 302 பேருந்துகள் வர உள்ளது. பிற மாநிலங்களில் ஆட்கள் ஏறி பேருந்துகள் நிறைந்தால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லும் வகையில் தமிழகத்தில் பேருந்துகள் அரசின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே முதல்வரின் உத்தரவு கொரனா காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் அதிக அளவு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், பொறுப்பு மேயர் ராஜூ, மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

திருமங்கலக்குடியில் உள்ள அருள்மிகு புத்துமாரியம்மன், ஆலயத்தில் ஆடி திருவிழா

வன்னியர் சங்க 45 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.