in

நெல்லை வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கார்த்திகை மாத தெப்ப உற்சவம்

நெல்லை மாவட்டத்தின் மிகப்பெரிய குடவரை கோவிலான வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கார்த்திகை மாத தெப்ப உற்சவம் நடைபெற்றது.

சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.

நெல்லை மாவட்டத்தில் மிக பெரிய குடவரை கோவிலான வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கடைசி வெள்ளிக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெறும் அதன்படி இன்று காலை சுப்பிரமணியருக்கு விஸ்வரூப தரிசனத்துடன் சுவாமி காட்சியளித்தார் சிறப்பு அபிஷேகங்களுடன் சுப்பிரமணியருக்கு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் இரவு 10 மணி அளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தெப்ப உற்சவ திருவிழாவை துவக்கி வைத்தார்.

தெப்பத்திருவிழாவில் உற்சவர், வள்ளியுடன் சரவணப்பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.

தெப்பத்திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

தஞ்சாவூர் பெரிய கோவிலில் தென் கைலாய பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

1000-திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் வாய்க்காலில் உடைப்பு