in

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு

 

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் மூலம் பெறப்பட்ட ரூபாய் 20 லட்சத்து 44 ஆயிரத்து 371 ரூபாய் ரொக்க பணமும் தங்கம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் நிரந்தர உண்டியல் மூலமும் திருவிழா காலங்களில் தற்காலிக உண்டியில் மூலமும் பக்தர்களிடம் காணிக்கை வசூல் செய்யப்படும்.

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிரந்தரமாக 22 உண்டியல் நிறுவப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்பட்டு வருகிறது.

அதன்படி ஒவ்வொரு இரண்டு மாத இடைவெளியில் தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உதவியுடன் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகஸ்தர்கள் முன்னிலையில் எண்ணப்படும் அதன்படி நெல்லையப்பர் கோவிலில் இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த பணியில் உழவாரப்பணி பக்தர்கள், கோவில் ஊழியர்கள், அறங்காவலர் குழு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு கணிக்கையை கணக்கீடு செய்தனர்.

இந்த உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக ரொக்க பணம் ரூபாய் 20 லட்சத்து 44 ஆயிரத்து 371 ரூபாயும் 40 கிராம் தங்கமும் , 100 கிராம் வெள்ளியும் வெளிநாட்டு பணம் 44 எண்ணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதும் எண்ணிக்கையில் தெரியவந்தது.

இந்த உண்டியல் பணம் அனைத்தும் நேரடியாக வங்கி அதிகாரிகள் மூலம் கோவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

சிதம்பரம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு

தோல்விக்கு ஹீரோவும் இயக்குனரும் பொறுப்பு ஏற்க வேண்டும்