நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
பட்டுக்கோட்டை அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் செண்டை மேளம் விண்ணை
அதிரவைக்க இன்று வெகு விமரிசையாக நடந்தது – முதல் கும்பாபிஷேகம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.
அதனைத் தொடர்ந்து செண்டை மேளம் விண்ணை அதிரவைக்க, நாதஸ்வரம், மேளம் முழங்க கடம் புறப்பட்டு அருள்மிகு பாலமுருகன், ராஜகணபதி, இடும்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். ஆலயம் அமைத்து முதல் மஹா கும்பாபிஷேகம் என்பதால் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு அருள்மிகு பாலமுருகனின் அருளை பெற்றுச் சென்றனர்.