எனது படங்களின் வெற்றியை நான் கொண்டாட விட்டதில்லை… Samantha
அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து துவண்டு போன சமந்தா மீண்டும் நடிப்பில் நம்பர் ஒன்…னாக வேண்டும் என்று பிஸி…யாக பரந்துகொண்டிருந்தவர் ஷூட்டிங் இடையில் ஒரு சிறு பேட்டி அளித்தார்.
திரை துரையின் 14 நாள் ஆண்டு கால வேதனையை தற்பொழுது ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். எனது இத்தனை கால சினிமா பயணத்தில் நான் வேதனைப்பட்ட நாட்கள் தான் அதிகம் மகிழ்ச்சியான நாட்கள் மிக குறைவு.
நான் தசை அயற்சி நோயால் பாதிக்கப்பட்டதால் சினிமா துறையில் உச்சத்தில் இருந்த நாட்களை நினைத்து சந்தோஷம் கூட என்னால் படம் முடியவில்லை.
ஆரம்ப காலத்தில் எனக்கு என் மீது நம்பிக்கை இல்லை நாம் மற்ற பெண்களைப் போல் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையே எனக்கு அதிகம் இருந்தது.
சினிமாவில் நான் இந்த நிலைக்கு வர நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன் நான் நம்பர் ஒன் நடிகையாக வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பிரச்சனைகளையும் மன தைரியத்துடன் சந்தித்து அதிலிருந்து வெற்றிகரமாக வெளி வந்தேன்.
நான் சில தவறுகளை செய்த பிறகு தான் அதிலிருந்து எப்படி மன தைரியத்துடன் வெளிவர வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். எனது படங்களின் வெற்றி பங்களிப்பில் எனக்கு முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஹீரோவாலும் மற்ற நடிகர்களாலும் அல்லது இயக்குனறால் தான் இந்த படம் வெற்றி அடைந்தது என்று மனதிற்குள் சொல்லிக் கொள்கிறேன். என்னால் நான் நடித்த படங்களின் வெற்றியை எப்பொழுதுமே என்னால் கொண்டாட முடிந்ததில்லை.
அந்த வெற்றியின் உரிமையை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டேன் நான் இந்த 14 வருட சினிமா பயணத்தில் பணிகளுக்காகவே அதிக நேரம் ஒதுக்கி இருக்கிறேன்.
எப்பொழுதும் என் மூளைக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுத்ததே இல்லை என்னை எல்லோரும் கோல்டன் லேக் (golden leg ) என்று கூறுவார்கள்.
ஆனால் அந்த தருணத்தில் கூட எனக்கு என் மீது தன்னம்பிக்கை இல்லை ஆனால் இப்பொழுது என்னை பார்த்து எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. நான் எப்படி இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி ஒரு நடிகையாக ஜெயித்திருக்கின்றேன் என்பது தெரியவில்லை.
இந்த சினிமா ரேசில் என்னோடு நிற்பவர்கள் யார்? என்னோடு மோதுகிறவர்கள் யார் என்று நான் சிந்தித்ததே இல்லை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றேன்.
கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால், போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும். …பிடல் காஸ்ட்ரோ கூறியது போல நாமும் போர்களத்தை பு மெத்தையாக நினைத்து முன்னேறி செல்வோம்.