in

புதிய பேருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்


Watch – YouTube Click

புதிய பேருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

 

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஜவுளி உற்பத்தி நகரத்தையும் ஜவுளி சந்தை நகரத்தையும் இணைக்கும் வகையில் அருப்புக்கோட்டை – ஈரோடு புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்து புதிய தினசரி பேருந்து பேருந்து சேவையினையும் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

அருப்புக்கோட்டை நகர் பகுதியில் நெசவுத் தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. இங்கு சுமார் 15,000 திற்கும் மேல் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50,000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டையில் உற்பத்தி செய்யப்படும் சேலை ரகங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஈரோடு ஜவுளி சந்தைக்கு கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அருப்புக்கோட்டைக்கும் ஈரோடுக்கும் நேரடி போக்குவரத்து சேவை கிடையாது.

இதனால் ஜவுளி உற்பத்தை நகரமான அருப்புக்கோட்டையையும் ஜவுளி சந்தை நகரமான ஈரோடையும் இணைக்கும் வகையில் புதிய பேருந்து சேவை துவங்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை அடுத்து அருப்புக்கோட்டையில் இருந்து ஈரோடுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை ஈரோடு புதிய வழித்தடத்தினையும், அந்த வழித்தடத்தில் அருப்புக்கோட்டையில் இருந்து ஈரோடுக்கு தினசரி செல்லக்கூடிய பேருந்து சேவையிணையும், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

சிஏஏ சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை அமித்ஷா அதிரடி

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம் குடியரசு தலைவரிடம் அறிக்கை தாக்கல்