மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள சேவுகப் பெருமாள் திருக்கோவிலுக்கு 15 லட்ச ரூபாய் செலவில் புதிய ரதம் அர்ப்பணித்த பெண் பக்தர்: இன்று திருத்தேர் வெள்ளோட்டம்
மதுரை அண்ணா நகரில் 200 ஆண்டு பழமை வாய்ந்த சேவுகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொழிலதிபர் ராஜ்குமார் அவர்களின் மனைவி சசிகுமாரி அவர்கள் 15 லட்சம் செலவில் தேக்குமரத்திலான புதிய தேர் செய்து கொடுத்துள்ளார்.
அந்த புதிய தேர் பெல்வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேரானது கோவிலை சுற்றி வந்து திருஷ்டிகள் உடைக்கப்பட்டு தேர் நிலை நிறுத்தப்பட்டது.
திருத்தேரை கோவிலுக்கு அர்ப்பணித்த பெண் பக்தர் சசிகுமாரி ராஜ்குமார் கூறும்போது சிவபெருமாள் கோவிலுக்கு திருத்தேர் செய்து கொடுக்க நினைத்திருந்தோம். அந்தத் தேரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செய்ய கொடுத்தோம். ரூ. 15லட்சம் செலவில் முற்றிலும் தேக்கு மரத்தால் (ரதம்) சிற்ப அம்சங்களுடன் திருத்தேர் செய்து முடிக்கப்பட்டு இன்று கோவிலுக்கு கொடுத்துள்ளோம் அந்த திருத்தேர் ஆனது வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த திருத்தேர் புரட்டாசி மாதம் ரதோத்ஸவம் சுவாமி புறப்பாடு நடைப்பெற உள்ளது.