முதல்வர் மு.கருணாநிதி 101 வது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள்
நாகை அருகே வலிவலத்தில் மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி 101 வது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
மறைந்த தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவு மற்றும் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி கிளை கழக திமுக சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கழக கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிலையம் அருகில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் எஸ். டி. கண்ணன், கீழ்வேளூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும் வலிவலம் ஊராட்சி மன்ற தலைவருமான மணிகண்டன் ஆகியோர் திமுக கழக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
தொடர்ந்து பேரிடர் காலங்களிலும் பல்வேறு இக்கட்டான சூழலிலும் தொய்வில்லாமல் தூய்மை பணிகளை மேற்கொண்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை அறிவித்து புத்தாடை வழங்கப்பட்டது.
தொடர்ந்து பாஜக அதிமுக மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜி.ஜீவானந்தம் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர், கழகத்தின் இணைந்தவர்களுக்கு வலிவலம் கிளை கழக செயலாளர் செல்வராஜ், வலிவலம் முன்னாள் ஊராட்சி செயலாளர் வீரசெல்வம், கொடியாலத்துர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ஐயப்பன் உள்ளிட்ட சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிகழ்வில் கிளைக் கழக உறுப்பினர்கள் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.