நாகை மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 333 மனுக்கள்; மாற்றுத்திறனாளிகள் உட்பட்ட பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 333 மனுக்களை பொது மக்கள் அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சமூகநலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.2 ஆயிரத்து 832- மதிப்புள்ள காதொலி கருவி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.900- மதிப்புள்ள ஊன்றுகோல் ஆகியவற்றை பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.