சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
அதிமுக கூட்டணி வலுப்பெற வேண்டும் – சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வுடன் கூட்டணி தொடரும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி., மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டு மறுவாழ்வு என்பது அப்பட்டமான தவறான நடவடிக்கை எனவும் குற்றச்சாட்டு
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
வரும் உள்ளாட்சி மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக – புதிய தமிழகம் கட்சி கூட்டணி தொடரும். மேலும் அதிமுக கூட்டணி வலுப்பெற வேண்டும்.
பட்டாசு விபத்தை தடுக்க அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும்.தொடர் வெடி விபத்திற்கு அரசுதுறைகளின் தோல்வியே காரணம்.
நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
மது விலக்கு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழில்லர்களை வெளியேற்ற கூடாது.அவர்களும் வெளியேற கூடாது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அங்கேயே வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டு மறுவாழ்வு என்பது அப்பட்டமான தவறான நடவடிக்கை . விரைவில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்திப் பேன் என தெரிவித்தார்.