in

தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என வாதிட உள்ளேன் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும், இது தொடர்பான வழக்கு 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அன்றைய தினம் நானே நேரில் ஆஜராகி மாஞ்சோலை பகுதியிலேயே அந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என வாதிட உள்ளேன் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில், தொழிலாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க தயாராக இருப்பதாக பிபிடிசி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில், இது தனிப்பட்ட தனியார் நிறுவனத்துக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்னை என்று வாதிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு அரசின் டான் டீ நிர்வாகம் ஏற்று நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள டான் டீ நிர்வாகம் முன் வர வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக அரசு மனிதத் தன்மையுடன் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு இன்று ஆஜராகிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும், இது தொடர்பான வழக்கு 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அன்றைய தினம் நானே நேரில் ஆஜராகி மாஞ்சோலை பகுதியிலேயே அந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என வாதிட உள்ளேன் என தெரிவித்தார்.

What do you think?

மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளச்சாராய மரணம் என திமுக அரசை தட்டி கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி நீங்கள் சங்கீகளாக மாறிவிட்டீர்களா ?