in

தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் முனைவராக மாற புதிதாக பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் முனைவராக மாற புதிதாக பயிற்சி வகுப்பு

 

இந்தியாவின் பிரபல அழகு சாதன பொருட்களின் நிறுவனமான நிவியா மற்றும் கவின் கேர் நிறுவனம் தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு தொழில் முனைவராக மாற புதிதாக பயிற்சி வகுப்பை நடத்தினர்.

முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தங்களின் உற்பத்தி பொருள்களான மீரா ஷாம்பு, சிக் ஷாம்பூ, இண்டிகா ஹேர் டை, கவின் மில்க், NIVEA போன்ற பொருட்கள் எவ்வாறு மக்களை சென்றடைந்தன என்பது போன்று தங்களின் அனுபவத்தை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள் தங்களின் சந்தேகங்களையும் புதிய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளையும் அவர்களிடம் பெற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்வினை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் T.V கிறிஸ்டி மற்றும் பதிவாளர் முனைவர் M.அப்துல் கனிகான் துவக்கி வைத்தனர்.

பல்கலைக்கழக தலைமை செயல் அதிகாரி முனைவர் வேங்கடா HRD முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக Cavin Kare திரு. இந்தியாவிற்கான தலைமை செயல் அலுவலர் சந்தோஷ் மற்றும் NIVEA-வின் தமிழக மேலாளர் தேவராஜ் கலந்து கொண்டனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் பல்கலைக்கழக உதவியுடன் படிக்கும் போதே தொழில் தொடங்கி சாதித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். M.P.நாகேஸ்வரன் அவர்களது பெயரில் இளைய ஆளுமைக்கான என் “N”விருதும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கலந்து கொண்டு பயனடைந்தனர்.

What do you think?

குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் 31 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது

கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோவில் தேரோட்டம்