பாபநாசம் அருகே பழமை வாய்ந்த ராஜகோபாலபெருமாள் கோவிலுக்கு 60 வருடங்களுக்குப் பிறகு புதிய அறங்காவலர்கள் நியமனம்…….
கிராம மக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா நெடுந்தெருவில் உள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலுக்கு கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் புதிய அறங்காவலர்களை தேர்வு செய்து கோவில் செயல் அலுவலர் பார்த்திபன் , கோவில் ஆய்வாளர் லட்சுமி, தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், கோவில் கணக்கர் கோபிகிருஷ்ணன் மற்றும் ஊர் கிராமவாசிகள் முன்னிலையில் அறங்காவலர் நியமனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ரமணி , வசந்தி ,நர்கீஸ் கான் ஆகிய மூவரும் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கிராமவாசிகள் முக்கியஸ்தர்கள் சால்வை மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் 60 வருடங்களுக்குப் பிறகு கோவில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது இந்து அறநிலையத்துறையினருக்கு கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் நன்றியையும், பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.