நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள தளி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான காளியம்மன்,பகவதியம்மன் கோவில் ஆணித்திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்களின் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூங்கரகத்தில் எழுந்தருளி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட தளி கிராமத்தில்,ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் காளியம்மன், பகவதியம்மன் கோவில் ஆணித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது முன்தினம் அம்மன் பூங்கரம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக கோவில் வந்தடைந்தது,
அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, தீசட்டி,பால்குடம் எடுத்து நேற்றிக்கடன் செலுத்தினர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,கடைசி நாளான இன்று காளியம்மன்,பகவதியம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களின் முளைப்பாரி ஊர்வலத்துடன் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்,இத்திருவிழாவிற்கு சென்னை,மதுரை,கோவை, திருச்சி,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்,