திருச்சியில் NIA அதிகாரிகள் இரண்டு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக, திருச்சி பீமநகர், கூனிபஜாரை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சேர்ந்த 3 அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதேபோல் கோட்டை காவல் சரக்கத்திற்கு உட்பட்ட அப்துல் குத்தூஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அஷ்ரப் அலி திருச்சி அல்லிமால் தெருவில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். சகோதரர் அகமதுஅலி திருச்சி மேல்புலிவார்டு பகுதியில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அஷ்ரப்அலியின் பாட்டி பாகிஸ்தானில் இருந்ததாகவும் அப்போது இந்த குடும்பத்தினர் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
பாட்டி இறந்த பின்னர் பாகிஸ்தான் யாரும் செல்வதில்லை என கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் குடும்பத்தினர் ஒருவர் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் இவர்களது உறவினர் கோவை குண்டுவெடிப்பின் போது அங்கே இருந்ததாக கூறப்பட்டதால் தற்போது இந்த சோதனை நடைபெறுகிறது.