நீலாம்பரி ஆட்டம் ஆரம்பம்
எடுக்குற பாதி படங்கள் ஊத்திகிறதால, வெற்றி பெற்ற தமிழ் படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பதும் படத்தினை நவீன முறையில் டிஜிட்டலைஸ் பண்ணி Re-release செய்வது தற்போது கோடம்பாக்கத்தின் புது Trend..
Re-release..ஆன கில்லி புது படங்கலையே மிஞ்சி அதிக லாபத்தை பெற்றதால பழைய படங்களை எல்லாம் தூசு தட்டி வருது தயாரிப்பு நிறுவனம்.
ரஜினிகாந்தின் பாட்ஷா, முத்து வரிசையில் ….ரஜினிகாந்த் நடிப்பில் 1999..ஆம் ஆண்டு வெளியாகி பட்டைய கிளப்பிய படையப்பா மீண்டும் 25 வருடங்களுக்கு பிறகு Re-release ஆகிறது.