in

குடும்பம், குழந்தை, தொழில் இல்லை காசு சம்பாதிக்க வேண்டிய தேவையில்லை ஜோதிமணி பேச்சு


Watch – YouTube Click

குடும்பம், குழந்தை, தொழில் இல்லை காசு சம்பாதிக்க வேண்டிய தேவையில்லை ஜோதிமணி பேச்சு

 

கரூரில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எம்.பி ஆக இருந்த நாட்களை எவ்வாறு செலவிட்டேன் என புள்ளி விவரத்துடன் பேசி பிரச்சாரம் செய்தார்.

எனக்கு குடும்பம், குழந்தை, தொழில் இல்லை காசு சம்பாதிக்க வேண்டிய தேவையில்லை, இதனால் தான் இவ்வளவு நாட்கள் மக்கள் பணியாற்ற முடிந்தது என கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேச்சு.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்காவாடி, புத்தாம்பூர், மூக்கணாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் ஜோதிமணிக்கு பட்டாசு வெடித்து, பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஜோதிமணி, 2019 முதல் 2024 வரை 1760 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். இதில் பாராளுமன்ற கூட்டத்திற்கு 218 நாள் பங்கேற்றுள்ளேன். நிலைக்குழு கூட்டத்தில் 51 நாள், பயண நாட்கள் 224 நாள், தொகுதியில் 912 நாட்கள் இருந்துள்ளேன். நன்றி அறிவிப்பு, அரசு நிகழ்ச்சிகள் என 355 நாட்கள் வெளியில் இருந்துள்ளேன். சிறந்த நாடாளுமன்ற குழுவில் தேர்வாகி 3 முறை வெளிநாடு சென்றுள்ளேன். சுபகாரியங்களுக்கு 162 நாட்கள் சென்றுள்ளேன். இதில் நாட்கள் எங்கு இருக்கிறது.

எனக்கு குடும்பம் கிடையாது, குழந்தைகள் கிடையாது. அவர்களுக்காக நேரம் செலவிட வேண்டியதில்லை, தொழில் இல்லை, காசு சம்பாதிக்க வேண்டிய தேவை இல்லை. அரசு கொடுக்கும் சம்பளத்தில் 10 முதியவர்களுக்கு உதவி செய்கிறேன். மீதமுள்ள தொகையை எனது செலவுக்கு வைத்துக் கொள்கிறேன். இதனால் தான் இவ்வளவு நாட்கள் மக்கள் பணியாற்ற முடிந்தது. எனக்கு தமிழ்நாட்டில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கி இருக்கிறார்கள். அதனை உங்களுக்கு சமர்பிக்கிறேன். மீண்டும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

டீ போட்டுக் கொடுத்தும், சலவை செய்தும், கிரிக்கெட் விளையாடியும் வாக்கு சேகரிப்பு

அடர்ந்த வனப்பகுதியில் சட்ட விரோதமான மதுபானஆலை கண்டுபிடிப்பு