இந்தி வேண்டாம்… தமிழ் படங்களை மட்டும் ஹிந்தியில் டப் செய்யலாமா?
பவன் கல்யாண் இந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் x…தளத்தின் மூலம் கடுமையாக பதில் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்த ஜனாசேனா கட்சியின் தொடக்க விழா நாளில் உரையாற்றிய துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பை அரசியல் ஆக்குகிறார்கள் என்று விமர்சித்தார்.
இந்த தலைவர்கள் ஹிந்தியை எதிர்த்தாலும் தமிழ் படங்களை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து ஆதாயம் தேடுகின்றனர். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஏன் ஹிந்தியை எதிர்க்கிறார்கள்? தங்கள் படங்களை ஹிந்தியில் மட்டும் மொழிமாற்றம் செய்யலாமா? அதற்கு ஏன் அனுமதிக்கிறார்கள் என்று பவன் கல்யாண் கேள்வி எழுப்பினார் ?
அதற்குப் பிரகாஷ் உங்கள் இந்தி மொழியை எங்களிடம் திணிக்காதீர்கள் இது இன்னொரு மொழியை வெறுப்பதல்ல நமது தாய்மொழியும் நமது கலாச்சாரத்தையும் சுயமரியாதையுடன் பாதுகாப்பதாகும் தயவு செய்து இதனை பவன் கல்யாண் …னுக்கு யாராவது விளக்குங்கள் என்று கூறியுள்ளார்.