in

யார் நினைத்தாலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இங்கு கொண்டுவர முடியாது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேட்டி

திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் முன்னெடுப்பில் தான் ஒட்டுமொத்த டெல்டா பகுதியே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. எந்த காலத்திலும், யார் நினைத்தாலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இங்கு கொண்டுவர முடியாது என திருத்துறைப்பூண்டியில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேட்டி

திருவாரூர் மாவட்டத்தில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் இறுதி நாளான இன்று கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைதல் என்ற தலைப்பில் திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் சங்கேந்தி பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது

கூட்டுறவு வார விழாவினையொட்டி 3553 ரூ.24.34 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவர்களுக்கு பரிசுகளை மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா வழங்கினார்.

தொடர்ந்துசெய்தியாளர்களை சந்தித்த தொழில் மற்றும் தொழில் ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்ததாவது….

திராவிட மாடல் ஆட்சியில் தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது என மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் முன்னெடுப்பில் தான் ஒட்டுமொத்த டெல்டா பகுதியே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. எந்த காலத்திலும், யார் நினைத்தாலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இங்கு கொண்டுவர முடியாது. இது தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டி அதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் தரக்கூடிய வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வரலாற்றிலேயே முதல்முறையாக ஜெயங்கொண்டத்தில் புதிய தொழிற்சாலை அமைத்து அதில் 15000 மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதுபோல எங்கள் ஊருக்கும் வேலை வாய்ப்புகளை பெற்று தாருங்கள் என திருவாரூர் மாவட்ட மக்கள் கேட்கின்றனர். திராவிட மாடல் நாயகர் ஆட்சியில் சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் விவசாய விலைப் பொருளுக்கு மதிப்பு கூட்டும் வேலை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட மக்கள் பயன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது தொடர்பான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ , தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

What do you think?

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை

ஒரு வருடமாக வீட்டிற்கு வராத A.R. Ragman….