சிம்பொனி யாரும் Download செய்ய கூடாது
வெற்றிகரமாக லண்டனில் சிம்பொனி அரங்கேற்றிவிட்டு நேற்று இந்தியா திரும்பினார் இசையமைப்பாளர் இளையராஜா.
நிருபர்களை சந்தித்த அவர் சிம்பொனியை இறைவன் அருளால் வெற்றிகரமாக நான் முடித்து விட்டேன். மிக்கேல் தாம் என்ற இசை குழுவை வழி நடத்துபவர் நான் கொடுத்த இசை நோட்டை சிறப்பாக கையாண்டார்.
பொதுவாகவே சிம்பொனி முடியும் வரை யாரும் கைதட்ட கூடாது கைதட்ட மாட்டார்கள் என்பது விதிமுறை ஆனால் எனது சிம்போனி..யை பார்க்க வந்த ரசிகர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு முறையும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இது தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய பெருமை இந்த இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது என்று எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்’.
இதை நேரில் வந்து மட்டும் தான் கேட்க வேண்டும் இந்த சிம்பொனியசையை இன்னும் 13 நாடுகளில் அரங்கேற்ற இருக்கிறேன் அதற்கான நாட்கள் முடிவாகிவிட்டது.
செப்டம்பர் 6ஆம் தேதி பாரிஸிலும் அக்டோபர் ஆறாம் தேதி துபாயில் நடக்கிறது. ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளேன் வெளிநாடுகளில் அரங்கேற உள்ள சிம்பொனி தமிழர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் அரங்கேற வேண்டாமா அதுவரை தமிழர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.