இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாநில அரசிடம் 20 ஆயிரம் அரசு பேருந்துகள் கிடையாது;தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி;தமிழகத்தில் நேரமுறைப்படி பேருந்து இயக்குகிறது; – விருதுநகரில் 30 புதிய பேருந்துகளை துவக்கி வைத்து போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பேச்சு…
விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் 30 புதிய பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்,வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்,மகளிருக்கு விடியல் பயணம் கொண்டுவருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்து அதை ஆட்சிக்கு வந்த உடனே நிறைவேற்றியவர் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த பயணத்தால் போக்குவரத்து துறைக்கு நஷ்டம் ஏற்படுவதாக சொல்வது ஏற்புடையதல்ல என்றும் நடப்பாண்டு கூட நிதிநிலை அறிக்கையில் ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதால் தான் முதல் தேதியிலேயே பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க என்றார்.
அண்டை மாநில போக்குவரத்து துறையில் மூன்று மாதங்கள் ஆகியும் சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலையை சுட்டிக்காட்டிய அமைச்சர்,கடந்த ஆட்சிகாலத்தில் ஊதிய ஒப்பந்த பிரச்சனையை மூன்று ஆண்டுகள் இழுத்தடித்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை சீர்குலைத்ததை திமுக ஆட்சியில் சீர்செய்யப்பட்டு 5 சதவிகித ஊதிய உயர்வோடு போக்குவரத்து கழகம் சீர்செய்யப்பட்டது என்றார்.தற்போது 7500 புதிய பேருந்துகள் வர இருப்பதாகவும்,நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆயிரம் புதிய பேருந்துகள் வந்துவிட்டதாகவும்,இந்த வாரத்திற்குள் 300 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாநில அரசிடம் 20 ஆயிரம் பேருந்துகள் கிடையாது என்றும் தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது, நேரமுறைப்படி பேருந்து இயக்குகிறது தமிழகத்தில் தான் இயங்குகிறது என்றார் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் தங்கபாண்டியன் மேயர் சங்கீதா இன்பம் விருதுநகர் நகராட்சி சேர்மன் மாதவன் தொமுச மண்டல தலைவர் ராஜா செல்வம் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் என்ன பலர் பங்கேற்றனர்