‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம்
கஜினி, பிகில், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற பிரபல தென்னிந்திய நடிகை நயன்தாரா, தனது அற்புதமான நடிப்பு மற்றும் ஏராளமான ரசிகர் பட்டாளத்திற்காக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
கமலஹாசன், அஜித்குமார், ஜெயம் ரவி தொடர்ந்து நயன்தாராவும் தன்னை இனி லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார்.
இந்த பட்டத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் இனிமேல் என்னை எல்லோரும் நயன்தாரா என்று அழைத்தால் போதும் நடிகைகளுக்கு பட்டமும் விருதும் முக்கியம் ஆனாலும் என் பெயர் தான் எனக்கு எப்போதும் நெருக்கமாக உள்ளது.
ரசிகர்களின் “நிபந்தனையற்ற அன்பு மற்றும் பாசத்திற்கு” நன்றி. உங்களில் பலர் என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்பாகக் குறிப்பிட்டுள்ளீர்கள், அது உங்கள் அபரிமிதமான பாசத்திலிருந்து பிறந்த பட்டம்.
இவ்வளவு மதிப்புமிக்க பட்டத்தை எனக்கு வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இருப்பினும், நீங்கள் அனைவரும் என்னை ‘நயன்தாரா’ என்று அழைக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்