in

நாகையில் தண்ணீரில்லாமல் முளைக்காத சம்பா நேரடி விதைப்பு நெற் பயிர்கள்

நாகையில் தண்ணீரில்லாமல் முளைக்காத சம்பா நேரடி விதைப்பு நெற் பயிர்கள்

 

நாகையில் தண்ணீரில்லாமல் முளைக்காத சம்பா நேரடி விதைப்பு நெற் பயிர்கள்; குபேட்டா கொண்டு அழித்து மறு நடவு செய்யும் விவசாயிகள்: ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் கூடுதல் செலவு செய்துள்ளதாக வேதனை.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்காததால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து போனது இந்த நிலையில் சம்பா சாகுபடி மேற்கொள்ள அவ்வப்போது பெய்த மழையை நம்பி விவசாயிகள் நேரடி விதைப்பில் ஈடுபட்டிருந்தனர்.

விவசாயிகள் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு இல்லாததாலும் மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் உரிய நேரத்தில் வந்து சேராததாலும் நேரடி விதைப்பு செய்த கீழ்வேளூர், பட்டமங்கலம், தேவூர், இழுப்பூர், வடக்காலத்தூர், கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம், திருக்குவளை, சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்த விவசாயிகளின் விதைகள் 50 சதவீதம் முளைக்காமல் போய்விட்டது.

இதனால் விவசாயிகள் மீண்டும் நேரடி விதைப்பு செய்த வயல்களை உழவுப் பணி மேற்கொண்டு நாற்றுக் கொள்முதல் செய்து நடவு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

அதனால் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வரை கூடுதல் செலவு செய்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே விவசாயிகள் குறுவை சாகுபடி இல்லாத நிலையில் சம்பா சாகுபடி ஆவது மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் கூடுதல் செலவு செய்து விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே அதிகாரிகள் மீண்டும் நடவு செய்த விவசாயிகளை கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஐப்பசி மாத சிறப்பு அலங்கார ஆராதனை

மின்மாற்றில் பழுது சரி செய்யும் பொழுது மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய மின் ஊழியர்