பணத்திற்காக திருமணம் செய்யவில்லை… அக்ஷயா…அம்மா..வின் உருகமான பதிவு
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்…சை அக்ஷயா நவம்பர் 7ஆம் தேதி ஜப்பானில் திருமணம் செய்து கொண்டார். அக்ஷயா தான் முழு மனதுடன் தனுஷை ஏற்றுக் கொண்டதாக பதிவுகள் பல வெளியிட்டாலும் பணத்திற்காக ஆசைப்பட்டு தான் தனுஷை கல்யாணம் செய்து இருக்கிறார் என்று பல கமெண்ட்ஸ்களும் விமர்சனங்களும் இன்றும் வந்த வண்ணம் இருக்க அக்ஷயாவின் அம்மா தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார் என் மகளை யாரும் தவறாக பேச வேண்டாம் என்னுடைய மூத்த மகளுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தேன் அவள் நன்றாக இருக்கிறார். என்னுடைய இரண்டாவது மகளுக்கும் நான் வரன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் தான் நெப்போலியன் குடும்பத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது எங்களுக்கு நெப்போலியன் குடும்பத்தினருடன் பல வருடங்களாக பழக்கம் .நெப்போலினின் மனைவி ஜெயசுதா..வின் வீட்டின் அருகில் தான் நாங்கள் பல வருடங்களாக குடிஇருக்கிறோம் அவர்கள் எங்கள் வீட்டில் வந்து பெண் கேட்டபோது நான் தயங்கினேன் ஆனால் என் பெண் எனக்கு நெப்போலியன் சார் பற்றி நன்றாக தெரியும் அவர்கள் குடும்பத்தில் நான் திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் சந்தோஷமாக இருப்பேன்…இன்னு சொன்னால் .
அதன்பிறகு எல்லோரும் பேசி சம்மதித்தோம். ஆனால் தொடர்ச்சியாக எங்களை எல்லோரும் விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள் . நாங்கள் எங்கள் பெண்ணின் வாழ்க்கையை எடுத்து விட்டதாக கூறுகிறார்கள். சமூக வலைதளத்தில் மட்டுமல்ல சொந்தக்காரர்களும் எங்களை திட்டுகின்றனர். எங்களை ரொம்ப பாதிக்கிறது என் மகள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து அவளுக்கு பிடித்த வாழ்க்கையை தான் நாங்கள் அமைத்துக் கொடுத்தோம் கல்யாணம் முடிந்து ஒரு வாரம் கழித்து நாங்கள் எங்கள் வீட்டுக்கு திரும்பி விட்டோம் Akshaya எங்களை பிரிவதை நினைத்து கஷ்டப்படுகிறார், அவர்கள் குடும்பத்தினர் அவளை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர், மாப்பிள்ளை தனுஷ் என்மே என் மகள் மீது அதிக பாசத்தை வைத்திருக்கிறார் என் மகள் துரு துரு கேரக்டர் எப்படி அமெரிக்காவில் இருக்க போகிறாள் என்று தெரியவில்லை. தயவு செய்து என்னை என் மகளை யாரும் தவறாக பேச வேண்டாம். அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று ஆசீர்வாதம் மட்டும் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.