திருமணம் ஆகவில்லை …எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது… சித்தார்த்
நடிகர் சித்தார்த் அதிதி ராவை காதலிப்பதாக கிசு கிசுக்கள் வந்த நிலையில் இருவரும் ரகசியமாக சென்ற வாரம் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் புகை படங்கள் வெளியானது.
ஆனால் சித்தார்த்தோ எங்களுக்கு நிச்சயம் மட்டும் தான் முடிந்திருக்கிறது திருமணம் ஆகவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதிதி ராவுடன் உண்டான காதலை பற்றி முதன் முறையாக மனம் திறந்த சித்தார்த் நாங்கள் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக நிறைய பேர் பேசுகிறார்கள் Secret ,…Private என்ற வார்த்தைகளுக்கு வித்தியாசம் இருக்கிறது.
எங்கள் நிச்சயதார்த்தம் ரகசியமாக நடக்கவில்லை எங்களது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தான் நடந்தது. திருமணத்தைப் பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை வீட்டு பெரியவர்கள் முடிவு செய்த பிறகு திருமண தேதியை அறிவிப்போம்.
இது பட ரிலீஸ் அல்ல உடனே அறிவிக்க எனது காதலை அதிதி ஏற்றுக்கொள்ள எத்தனை ஆண்டுகள் அல்லது நாட்கள் எடுத்தார் என்று கேள்விகளை கேட்க வேண்டாம்.
ஏனென்றால் என் காதலுக்கு சம்மதமா அல்லது முடியாதா என்ற முடிவு எனக்கு முக்கியம். அவர் சம்மதம் சொல்வாரா இல்லையா என பயந்தேன். ஆனால் தற்போது எனது பெயர் பாஸ் லிஸ்டில் வந்துவிட்டது என்று சித்தார்த் கூறினார்.