என் கதை இல்லை… மகிழ்திருமேனி open talk
பொங்களுக்கு ரிலீசாகும் விடாமுயற்சி என்று எதிர்பார்த்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் டேட் தள்ளி வைக்கப்பட்டது . இந்த படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேக் டவுன் பட குழுவினர் அதிகமாக பணம் கேட்டதால் தான் விடாமுயற்சியில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேக் down குழுவிருடன் சமரசம் நடத்தி அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வெளிவரும் என்றும் செய்திகள் வெளியான நிலையில் இப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியிடம் இது சம்பந்தமாக கேள்வி கேட்ட பொழுது இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது ஆனால் விடாமுயற்சி என்னுடைய கதை இல்லை கணவன் மனைவியின் சாலை பயணமும் அதில் நடக்கும் திகிலான அதிரடி திருப்பங்களும் சம்பவங்களும் தான் விடாமுயற்சி கதை என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். விடாமுயற்சியின் செகண்ட் சிங்கள் ஆன பத்திக்குச்சி என்ற பாடல் ரசிகர்களை வெறித்தனமாக கவர்ந்த நிலையில் அடுத்த மாதம் பிப்ரவரி ஆறாம் தேதி விடாமுயர்ச்சி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் விடாமுயர்ச்சி படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. இந்த படம் உலகளவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது ,ஓவர்சீஸ்(overseas) prebooking…கில் இதுவரை 50k வசூல் செய்துள்ளது விடாமுயற்சி , ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படு தோல்விக்கு பிறகு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் விடாமுயற்சி prebooking சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது