in

புதுச்சேரியில் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


Watch – YouTube Click

புதுச்சேரியில் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 

புதுச்சேரியில் கொரோனா காலத்தில் சுகாதாரத் துறையில் 2020 ஆம் ஆண்டு 260 செவிலியர்கள் கூடுதலாக பணி நியமன செய்யப்பட்டனர்.

இவர்கள் கொரோனா காலத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு பணிவிடைகள் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக பணி புரிந்து வந்த இவர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களையும் நடத்தி அரசுக்கு கோரிக்கை மனுவும் அளித்தினர்.

ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை இந்த நிலையில் கொரோனா களத்தில் பணிபுரிந்த தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் இந்த உத்தரவை இதுவரை புதுச்சேரி அரசு செயல்படுத்தவில்லை.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் சுதேசி பஞ்சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநில பூர்வீக ஆதிதிராவிட அரசு அலுவலர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்க பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.


Watch – YouTube Click

What do you think?

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா

முழு நேர அரசியல்வாதியா என்று என்னை கேள்வி கேட்கிறீர்கள்