தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் :-
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியாக சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் ஓய்வு ஊதியத்தை அதிகரித்து தரப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது.
ஆனால் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்புவது, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள் பங்கேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.