in

புதுச்சேரியில் குடும்ப அட்டை பெறுவதற்கு அதிகாரிகள் ரூ 20 ஆயிரம் லஞ்சம்


Watch – YouTube Click

புதுச்சேரியில் குடும்ப அட்டை பெறுவதற்கு அதிகாரிகள் ரூ 20 ஆயிரம் லஞ்சம்

 

புதுச்சேரியில் குடும்ப அட்டை பெறுவதற்கு அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் லஞ்சம் அதிகாரிகளை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் குடிமை பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகை

புதுச்சேரி அரசு சார்பில் குடிபைப்பெருள் வழங்கல் துறை மூலம் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மஞ்சள் நிறம் மற்றும் சிவப்பு நிறம் என 2 பிரிவுகளில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில் குடும்ப அட்டை பெறுவதற்கு ரூ.20 ஆயிரம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.

மேலும் நிறுத்தப்பாட்டுள்ள குடும்ப அட்டைகளை உடனடியாக வழங்கக்கோரியும், அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை கண்டித்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிமைப்பெருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து அலுவலகத்தின் உள்ளே சென்று அவர்கள் இயக்குனர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி உள்ளே கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சட்டமன்ற உறுப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் துறையின் செயலர் மற்றும் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் மூன்றாவது நாளாக தொடரும் பதற்றம் மேலும் 4 பேருக்கு மூச்சுத் திணறல்

புதுச்சேரியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்