சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி இயந்திரத்துடன் அகற்ற வந்த அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இயந்திரத்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் குண்டுகட்டாக தூக்கி கைது செய்த போலீஸாரால் பரபரப்பு, பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மூன்று வீடுகளை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றம் செய்தனர்.
சிதம்பரம் அருகே சி, தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரமேஸ்வரநல்லூர் ஆலங்குளம் பகுதியில் ஆலங்குளத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, அதன் அடிப்படையில் 67 வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது இந்நிலையில் மனைப்பட்டா வழங்கிய பிறகு 64 வீடுகளை இடிக்கவும் மனை பட்டா உள்ள மூன்று வீடுகளை இடிப்பதற்காக வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆலங்குளம் பகுதிக்கு ஜேசிபி இயந்திரத்துடன் சென்றனர், இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அதிகாரிகள் மற்றும் இயந்திரத்தை சிறப்பித்து மறியலில் ஈடுபட்டனர், ஒரு கட்டத்தில் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்வதற்காக குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர், பின்னர் மீண்டும் பலத்தை போலீஸ் பாதுகாப்புடன் முதற்கட்டமாக மூன்று வீடுகளை இடிக்கும் பணியை துவக்கினர், போராட்டத்தின் போது போலீசார்க்கும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது மேலும் குண்டுகட்டாக போராட்டக்காரர்களை கைது செய்து தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.