பொன்னமராவிலிருந்து வந்த காட்டெருமையை மயக்க ஊசி போட்டுபிடித்த அதிகாரிகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதிபகுதியில் புதுக்கோட்டைமாவட்டம் பொன்னமராவதி இருந்து வந்த காட்டெருமை ஒன்று பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
வனத்துறையினர்,தீயணைப்புத் துறையினர் போலீசார் மற்றும் வருவாய் துறை சேர்ந்துகாட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து லாரியில் ஏற்றி மீண்டும் பொன்னமராவதிக்கு அனுப்பி வைத்தனர்.
வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி கிராமத்திற்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காட்டெருமை ஒன்று சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம் மைக் செட் மூலம் விளம்பரப்படுத்தி காட்டெருமை ஊருக்குள் புகுந்துள்ளது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் என விளம்பரப்படுத்தினார்.
பின்பு காட்டெருமையை பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையொட்டி நாகை மாவட்ட வன பாதுகாவலர் அபிஷேக் டோமர் கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், தலைஞாயிறு வேளாங்கண்ணியில் இருந்து தீயணைப்பு துறையினர் மற்றும் வேதாரண்யம் டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் போலீசார் காட்டெருமை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்களாக காட்டெருமையை தேடி நேற்று முன்தினம் வனத்துறையினர் நாலுவேதபதியில்காட்டெருமை இருக்கும் இடத்தை அறிந்து அங்கு பாதுகாவலாக வனத்துறையினர் விடிய விடிய இருந்தனர்.
பின்பு சென்னையில் இருந்து மயக்க ஊசி போடும் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு அதிகாலையில் மயக்க ஊசி செலுத்த சென்றனர். ஆனால் அதற்குள் காட்டெருமை தப்பி சென்று விட்டது பின்பு தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று புஷ்பவனம் பகுதிக்கு காட்டெருமை உலாவதாக தகவலை கிடைத்து அங்கு சென்று அதிகாரிகள் மாட்டை சுற்றி வளைத்து அதற்கு மயக்க ஊசி செலுத்து பின்பு கிரேன் மூலம் மாட்டை லாரியில் ஏற்றி மீண்டும் பொன்னமராவதிக்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.
காட்டெருமை பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த காட்டெருமை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதில் இருந்து வேதாரண் தாலுக்கா நாலுவேதபதிக்கு எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.