in

நேரடியாக இணைப்பு தான் விஷவாயுவிற்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Watch – YouTube Click

புதுச்சேரியில் விஷவாயுத் தாக்கி மூன்று பேர் இறந்ததற்கு பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து நேரடியாக கழிவு நீர் தொட்டி இணைப்பு கொடுத்து தான் காரணம் என முதல் கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் நேற்று கழிவறை வழியாக வெளியேறிய விஷவாயு மூன்று பேர் உயிரை பறித்தது. புதுநகர் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து விஷவாயு தாக்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்..

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தலைமையில் ஒரு குழுவும் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரி தலைமையில் குழுவினர் ஒரு புறமும் மாவட்ட ஆட்சியரின் குழுவில் சேர்ந்த தாசில்தார் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் பாலாஜி ஆகியோரும் இன்று சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு
செய்தனர்.

ஆய்வுக்குப் பிறகு தாசில்தார் ராஜேஷ் கண்ணா கூறுகையில், சுத்திகரிப்பு நிலையத்தால் தான் பாதிப்பு ஏற்பட்டதாக மக்கள் கூறியதால் நேரில் ஆய்வு செய்தோம். ஆனால் சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து பணிகளும் தெளிவாக இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூறினார்.

பேட்டி….ராஜேஷ் கண்ணா,தாசில்தார்..

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் தட்டாஞ்சாவடி, மூலக்குளம், ரெட்டியார்பாளையம் ஆகிய பகுதிகளில் வீடுகளிலிருந்து வரப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து
புது நகர் மற்றும் மேட்டு வாய்க்கால் வழியாக அவை கடலுக்குள் அனுப்பப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டு முதல் இந்த சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருவதாக கூறும் இதில் எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை என கூறி இளநிலை பொறியாளர் பாலாஜி, மூன்று பேர் இறந்த துயர சம்பவத்திற்கு பாதிக்கப்பட்ட வீடுகளில் கழிவறையில் இருந்து நேரடியாக மேன் ஹோலுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விஷவாயு நேரடியாக தாக்குதல் நடந்துள்ளது என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

மதுரை சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு, சான்றிதழ் வழங்கும் விழா

திண்டுக்கல்லில் கவனக்குறைவாக பஸ் ஒட்டிய டிரைவர் மீது நடவடிக்கை