in

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக வீல் சேர் வழங்கிய அலுவலர்கள்

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக வீல் சேர் வழங்கிய அலுவலர்கள்

 

நாகையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக வீல் சேர் வழங்கிய அலுவலர்கள்: கோரிக்கை விடுத்த ஒரு மணி நேரத்திலேயே உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த சிறுவனின் தந்தை.

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் ஊராட்சி கட்டளை புலிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளியான ஆசைமணி மகன் அகிலேஷ்.

ஆசைமணி மனைவி சூர்யா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இரண்டு மகன்களுடன் ஆசை மணி வசித்து வருகிறார். திருக்கண்ணம்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆகாஷ் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அகிலேஷ் பள்ளி சென்றபோது திடீரென நடக்க முடியாமல் தடுமாறியுள்ளார். இதனை அடுத்து மருத்துவரிடம் பரிசோதித்த போது அகிலேஷுக்கு தசை சிதைவு நோய் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அகிலேஷை மகனை சுமந்து தினமும் பள்ளிக்கு சென்று விட்டு வருகிறார். இதனை அறிந்த அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் இன்று சிறுவனையும் அவரது தந்தையும் அழைத்து வந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மனு அளிக்க வந்துள்ளார்.

இதனை அறிந்த மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன் உடனடியாக சிறுவனின் நிலையை அறிந்து அரசு திட்டத்தின் மூலம் பன்னிரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான வீல் சேர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பேபி சிறுவனுக்கு வீல்சேரை வழங்கி மாணவரிடம் கனிவுடன் பேசினார். மனு அளித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக மகனுக்கு வீழ்ச்சியர் ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு சிறுவனின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.

What do you think?

தேவகோட்டை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவில் திருவிளக்கு பூஜை வழிபாடு

“சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் அவர்களின் 166-வது பிறந்த நாள் விழா