வேண்டாம் கடவுளே அஜித்தே…. நிறுத்துங்கடா கோஷத்தை …. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த அஜீத்
நடிகர் அஜித் தனது ரசிகர்கள் பொது இடங்களில் கோஷம் இடக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். அஜித் குமார் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டை கேட்க பொது இடங்களில் அஜித்தின் ரசிகர்கள் கடவுளே அஜித்தே என கோஷம் எழுப்பி வருகிறார்கள்.
பள்ளி. கல்லூரி மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளிலும் இவ்வாறு கோஷம் எழுப்புகின்றனர் இப்படி பொது இடங்களில் கடவுளே அஜித் என்று கோஷமிடும் வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ரசிகர்களுக்கு அஜித் கோரிக்கை வைத்து போஸ்ட். வெளியிட்டுள்ளார் .சமீப காலமாக பொது இடங்களில் அநாகரிகமாக ரசிகர்கள் கடவுளே அஜித்தே என்று கோஷம் போடுவது எனக்கு கவலை அளிக்கிறது என் பெயருக்கு முன்னால் வேற எதையும் இணைத்து கோஷம் இடுவதையோ அழைப்பதையோ நான் விரும்பவில்லை .இவ்வாறு கோஷம் போடுவதால் பொதுமக்கள் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்னுடைய கோரிக்கையை ஏற்று எனக்கு மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வாழுங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அழகான வாழ்க்கை அமைத்துக் கொடுங்கள் மேலும் என்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். ஏற்கனவே நடிகர் கமல்…களும் தன்னை உலக நாயகன் , ஆண்டவர்’ என்று அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். அஜித்தின் பதிவிற்கு ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் நக்கலாக ஒரு STATEMENT கொடுத்திருக்கிறார். நடிப்பது மட்டுமே தனது வேலை ரசிகர்களின் நேரம் பணம் உழைப்பை சுரண்டி பிழைப்பதல்ல என்பதை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறார்.
படம் பார்ப்பதோடு நிறுத்தி விட வேண்டும் அதன் பிறகு படிப்பு வேலை ..இன்னு பார்க்கனும் இனி இப்படி வெத்து கோஷங்களுக்கு தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் அதையும் மீறி யாராவது செய்தால் அதைப் பிடித்து தொங்கிக் கொண்டு வைரலாக்கி விடாதீர்கள் இதற்கு மேலும் திறுந்தாவிட்டால் அவமானம் தமிழகத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்று ஓங்கி நடு மண்டையிலேயே அடிச்சிருக்கார்.இனிமேலாவது ரசிகர்கள் சினிமா….வை ENTERTAINMENT….டா மட்டும் எடுத்துகிட்டா நல்லது.நடிகர்களுக்காக உயிரை’ பணையம் வைக்க தேவையில்லை.