ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழா
ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழாவின் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் இன்று நண்பகல் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ முத்தாலம்மன் விநாயகர்,முருகன், வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் பஞ்சமுக தீபாரதனை, மகாதீபாரதனை, கற்பூர ஆரத்தி . காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ முத்தாலம்மன் ஊஞ்சலில் வீற்றிருந்த தேரை மக்கள் வெள்ளத்தில் தேரானது அசைந்தாடி கிராமத்தின் தேரோடும் வீதியில் வலம் வந்தது.
பக்தர்கள் தாங்கள் விளைவித்த விளைபொருட்கள், சில்லறை காசுகள், சாக்லேட்டுகள் என வாரி இறைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.