ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஏகப்பட்ட நவராத்திரி விழா
ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஏகப்பட்ட நவராத்திரி விழாவில் இறுதி நாளான மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஏகப்பட்ட நவராத்திரி விழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ முத்தாலம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான்.
தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழைவெட்டுவது வழக்கம்.
இதேபோல் ஆலயத்தில் வாழைப்பழம் வெட்டுப்பழக்கம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ முத்தாலம்மனுக்கு காண்பிக்கப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு திரௌபதி அம்மன் திடலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நவராத்திரி துர்கா தேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின் போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் ஐதீகம் இதே போன்ற நிகழ்வை திரௌபதி அம்மன் திடலில் நிகழ்த்திக் காட்டினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.