in

தேர்தலில் போட்டியிட நிராகரித்ததால் திருச்சியில் முதியவர் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டம்


Watch – YouTube Click

தேர்தலில் போட்டியிட நிராகரித்ததால் திருச்சியில் முதியவர் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டம்

திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை முன்பு அமைந்துள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி காலையிலேயே போராட்டத்தில் துவக்கினார்.

போராட்டத்திற்கான காரணம் என்னவென்று கேட்ட பொழுது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் ராஜேந்திரன் பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய வேட்பு மனுவும் ஏற்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார். தற்பொழுது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து அதை மட்டும் ஏன் நிராகரித்தார்கள் என கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.

காலையிலேயே உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபடுவதால் அப்பகுதியில் சென்ற மக்கள் அதை வேடிக்கை பார்த்து சென்றனர். போலீசார் வந்து அவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

MR. and MRS. சின்னத்திரை சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட்