அதிமுக, திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தனர்
கோடை வெயிலை முன்னிட்டு திமுக சார்பில் தமிழக மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இலவசமாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில திமுக சார்பில் அண்ணா சாலையில் இலவச நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
உருளையன்பேட்டை தொகுதி திமுக பொறுப்பாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில அமைப்பாளர் சிவா இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதில் கிரேப் ஜூஸ், கரும்பு ஜூஸ் நன்னாரி சர்பத், கேக்கு வகைகள், நுங்கு, வெள்ளரி, மோர், இளநீர், உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதனை ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி பருகி வெயிலின் தாகத்தை தணித்துக் கொண்டனர்.
இதே போன்று புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் முதலியார் பேட்டை கடலூர் சாலையில் திறக்கப்பட்டது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் திறக்கப்பட்ட இலவச நீர் மோர் பந்தலில் நான்காயிரம் லிட்டர் சின்டெக் பேங்கில் இலவச மோர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு இலவசம் மோரை வாங்கி பருகி சென்றனர்.