அம்மாவின் நினைவு நாளில்…. நெகிழ வைத்த பிக் பாஸ் ஆரி அர்ஜுன்
பிக் பாஸ் மூலம் பிரபலமான ஆரி அர்ஜுன் தன்னுடைய அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டு அசத்தலான காரியம் ஒன்றை செய்து இருக்கிறார்.
அர்ஜுன் பெண்கள் ஒவ்வொருவருமே கொண்டாட வேண்டியவர்கள் தான் என்ற கருத்தை வலியுறுத்தி மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளையின் மூலம் ஏழ்மையின் காரணமாக பணியாற்றும் பெண்களில் 10 பேரை தேர்வு செய்து அவர்களை அதிரடியாக சந்தித்து கிப்ட் கொடுத்தார் நடிகர் ஆரி.
சமூக சீர்திருத்த பணிகள் இயற்கை விவசாயம் என்று பல சமூக காரியங்களை செய்து வரும் ஆரி அர்ஜுன் தன் அன்னை நினைவாக மகளிர் போற்றும் வகையில் அவர்களுக்கு தங்க நாணயங்கள் அளித்ததை மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இது குறித்து அர்ஜுன் பேட்டி அளிக்கையில் ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் குறிப்பாக நம் ரத்த உறவுகளான அம்மா மனைவி, அக்கா, தங்கை, குழந்தை என அனைவரையும் தாண்டி நமக்காகவும் இந்த சமூகத்திற்காகவும் உழைக்கும் கோடான கோடி பெண்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லோருக்கும் உதவ முடியவில்லை என்றாலும் ஒரு சிலரை சந்தித்து அவர்கள் பணியை பாராட்டி ஒரு சின்ன பரிசை அளிக்கும் பணியை நான் இன்று தொடங்கி இருக்கின்றேன்.
அவர்களின் வாழ்வாரத்தை மாற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் நிச்சயம் ஏதாவது செய்வேன் என்று உறுதி அளித்தார்.
மேலும் இந்த நல்ல காரியத்தை முதலில் வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று என் குடும்பத்திற்காக உழைக்கும் என் மனைவிக்கு நன்றி கூறி அனைத்து மகளிருக்கும் எனது சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் தினம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் சொல்லித் தர வேண்டும்.
தெருவோர கூழ் கடை வைத்திருக்கும் இரண்டு பேருக்கும், சாலைகளை சுத்தம் செய்யும் துப்பறிவாளர் இரண்டு பேருக்கும் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் மூன்று பெண்கள் மற்றும் திரைப்பட unit…டில் பாத்திரம் கழுவும் இரண்டு பெண்கள் போன்ற 10 பெண்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து கூறி தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.
நடிகர் ஆதி அர்ஜுன் இவரின் இந்த செயலை பார்த்து மகிழ்ந்த மகளிர்கள் அவருக்காக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நல்ல எண்ணங்களில் ஆரம்பிக்கும் எந்த காரியமும் நிச்சயம் வெற்றியை நோக்கிபயணிக்கும்….வாழ்த்துகள்… ஆரி அர்ஜுன்.