in ,

ஆடிப் பௌர்ணமியையொட்டி அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை

ஆடிப் பௌர்ணமியையொட்டி அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது..கோவிந்தா! கோசங்கள் முழங்க திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அழகர்கோவிலில் ஆடிப்பௌர்ணமியையொட்டி, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோயில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது.

அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழா நடைபெற்று வருகின்றது, இதில் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, அழகர்கோவில் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் படி பூஜை இன்று நடைபெற்றது.

முன்னதாக பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோவிலின் நிலைக்கதவுகளுக்கு சந்தனங்கள் பூசி சந்தன காப்பு மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து எலுமிச்சம் மற்றும் மலர் மாலைகளால் கதவுகள் அலங்கரிக்கப்பட்டன.அதன் பின்பு மணிக்கதவுகளின் உட்புறமுள்ள பதினெட்டு படிகளும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஜோதி ஏற்றபட்டதை தொடர்ந்து, பக்தர்களின் தரிசனத்திற்காக திருக்கோவில் கதவுகள் சிறிது நிமிடங்கள் மட்டும் திறக்கப்பட்டது.

அப்போது 18 படிகளிலும் ஏற்றப்பட்ட தீப ஒளி தரிசனத்தை கோவிந்தா! கோவிந்தா! என்ற கோஷங்கள் முழங்க கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கண்டு களித்து வழிபட்டனர்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் இந்த அரிதான அற்புத தரிசனத்திற்காக பெண்கள், குழந்தைகள் உட்பட மதுரை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில்

அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் செய்திருந்தனர்.

What do you think?

வருகிற 10 ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும் அந்த அடிப்படையில் நிதிநிலை அறிக்கை இருக்கும் ஓபிஎஸ் பேட்டி

சித்தர்காடு நுகர் பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலையை அப்புறப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சுடுகாட்டில் குடியேறி சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்:-