in

ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் திருக்கோவில் கும்ப படையல் இட்டு சிறப்பு பூஜை..

ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் திருக்கோவில் கும்ப படையல் இட்டு சிறப்பு பூஜை..

திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கோவில் நகரமான காஞ்சிபுரம் மேட்டு தெரு அருகே மகிஷாசுரனை வதம் செய்யும் திருக்கோலத்தில் காட்சி தரும் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது.

இத்திருக்கோவிலில் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் திரளான பெண்கள் தங்கள் குடும்பத்தினர் உடன் வந்து பொங்கல் வைத்து படை எடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.

ஆடிப்பூரம் திருநாளான இன்று கருக்கலில் அமர்ந்தவள் அம்மனுக்கு பல்வேறு வாசனை மற்றும் பழங்களால் ஆன சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பஞ்சவர்ண மலர்கள், வளையல், எலுமிச்சம் பழங்கள், ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் கருவறை முன்பு புளியோதரை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், உள்ளிட்டவை கும்பமாக படையல் இட்டு சிறப்பு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

ஆடிப்பூரத்தை ஒட்டி கருக்கனில் அமர்ந்தவள் அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற ஆடிப்பூர கும்ப படையல் திருவிழாவில் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வணங்கி வழிபட்டு சென்றனர்.

சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கும்ப படையல் வைத்து படைக்கப்பட்ட புளியோதரை, சக்கரை பொங்கல், தயிர் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது.

What do you think?

ஆடிப்பூரத்தை முன்னிட்டு தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் சுவாமிக்கு சந்தன காப்பு வளையல் அலங்காரம்.

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் மகா ருத்ர யாகம்