in

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் கேக் வெட்டப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை பேட்டையில் திமுக சார்பில் கேக் வெட்டப்பட்டு 548 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

துணை முதலமைச்சரும் இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக மாமன்ற உறுப்பினரும் 20 வட்ட செயலாளருமான மன்சூர் ஏற்பாட்டில் நெல்லை பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 48 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். தொடர்ந்து 548 பயனாளிகளுக்கு தையல் இந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்சியில் துணை மேயர் ராஜூ, மாமன்ற உறுப்பினர்கள் உலகநாதன், கந்தன், சகாயஜூலியட் மேரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்

What do you think?

தச்சநல்லூர் அருகே பால் கட்டளை பகுதியில் இடத் தகராறு அடிதடி ஒருவர் ஜி ஹெச் அனுமதி

நெல்லை டவுனில் உள்ள கால்வாயை மாநகராட்சி தூர் வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை