in ,

கருப்பசாமி ஆடி பூஜையை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது

கருப்பசாமி ஆடி பூஜையை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது

 

வேடசந்தூர் அருகே கருப்பசாமி ஆடி பூஜையை முன்னிட்டு 358
(3 டன் கறி) கிடாய்களை பலியிட்டு 20,000 மேற்பட்ட பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேர்ப்புளி கிராமத்தில் ஆர். கோம்பை, தாதனூர், கரையானூர், அரண்மனையூர், களத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழிபடும் கம்புகுத்து விநாயகர், வந்தவழி பெரியகருப்பசாமி, பெரியகாண்டியம்மன், கன்னிமார், முருகன், வைரவன் உள்ளிட்ட தெய்வங்களின் கோவில்கள் உள்ளது.

இந்த கோவில்களில் வருடா வருடம் ஆடி மாதம் முதல் வியாழக்கிழமை ஆடி பூஜை விழா மற்றும் அன்னதானம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆடி பூஜை விழாவில் திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்கள் அடுத்த ஆண்டு ஆடி மாதத்திற்குள்ளேயே நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

அவ்வாறு வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கிடாய், அரிசி மற்றும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை தருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் வியாழக்கிழமை அன்று வந்தவழி பெரியகருப்பசாமி உச்சிபூஜையும், கிடா கறி அன்னதானமும் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக கோவிலில் வைத்த வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் நேற்று கிடாய் மற்றும் அரிசி அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை கோவில் நிர்வாகத்தினரிடம் கொண்டுவந்து கொடுத்துள்ளனர். மொத்தம் 384 கிடாய் மற்றும் 10 டன் அரிசி பக்தர்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கிடாக்களை வந்தவழி பெரிய கருப்பசாமிக்கு முன்பு பலி கொடுத்து கிடாக்களை உரித்து கறிகளை வெட்டி அன்னதானத்திற்கு தேவையான பணிகள் தொடங்கப்பட்டது.
80 சமையலாளர்கள் சுமார் 3 டன் கிடா கறி, 10 டன் அரிசியை வைத்து பிரம்மாண்டமான அன்னதானத்தை தயார் செய்தனர்.

அதன் பின்னர் வந்தவழி பெரியகருப்பசாமி உச்சிபூஜை நடைபெற்று பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு கிடாக்கறி அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த அன்னதானத்தில் சுமார் 20,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கிடாயை அன்னதானத்திற்கு வழங்கிய பக்தர்களுக்கு டோக்கன் முறையில் குடத்தில் கிடாய் கறி குழம்பு மற்றும் சாப்பாடு வழங்கப்பட்டது.

What do you think?

குத்தாலம் இராஜகாளியம்மன் ஆலய 20 ஆம் ஆண்டு திருநடன உற்சவம்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பெரும் திருவிழா தேரோட்டம்