in

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் உறியடி உற்சவம்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் உறியடி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.

கிருஷ்ணன் அவதார தினமான ஆவணி ரோகிணி அஷ்டமி திதி நேற்று நாடு முமுவதும் சிறப்பாக நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு இராமசுவாமி கோவிலில் உறியடி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாலையில் இராஜகோபாலா் மற்றும் வேணு கோபாலன் உற்சவ மூர்த்திகள் சிறப்பாக அலங்காிக்கப்பட்டனா். தொடா்ந்து தோளுக்கிணியானில் இராஜகோபாலா் கோயில் முன் அமைந்துள்ள உறியடி இடத்திற்கு ஏழுந்தருளினாா். உறியடிக்க சிறுவுா்கள் உற்ச்சாகமாக கலந்து கொண்டனா். உறியில்
கட்டிஇருந்த மண்பாண்டத்தை கையில் உள்ள கோலால் உடைத்தனா். இதைப்போல் பெருமாள் வீதீ உலா வரும் மாடவீதி ரதவீதிகளில் ஆங்காங்கு உறியடி உற்சவம் நடத்தினா். சிறுவா் சிறுமியா்கள் கண்ணன் ராதை வேடம் இட்டு வலம் வந்தனா். சிறுமிகள் கோலாட்டம் அடித்தும் பெண்கள் கையில் விளக்கு ஏந்தியும் ஊா்வலமாக சென்றனா்

What do you think?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழா

நெல்லை மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் கார்த்திகேயன்