in ,

சரஸ்வதி பூஜை திருநாளை முன்னிட்டு சரஸ்வதி தேவி முன் புத்தகங்கள் வைத்து சிறப்பு வழிபாடு

சரஸ்வதி பூஜை திருநாளை முன்னிட்டு சரஸ்வதி தேவி முன் புத்தகங்கள் வைத்து சிறப்பு வழிபாடு

 

தென்காசியில் சரஸ்வதி பூஜை திருநாளை முன்னிட்டு சரஸ்வதி தேவி முன் புத்தகங்கள் வைத்து சிறப்பு வழிபாடு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

நவராத்திரி பண்டிகையின் 9ஆவது நாளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த நாளில் தொழில் கருவிகளைப் போற்றுவதையும் கல்விக்கு மதிப்பளித்து அதற்குரிய தெய்வத்தையும் போற்றி வணங்குகின்றனர்.

இதையொட்டி தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் முத்துமாலைபுரம் விளையாட்டு திடலில் அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் சரஸ்வதி பூஜை திருநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சரஸ்வதி தேவி முன் மாணவர்களின் புத்தகங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு செய்யப்பட்டது. மாணவ மாணவிகள் ஒவ்வொருத்தராக சரஸ்வதி தேவிக்கு மலர் தூவி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் சரஸ்வதி தேவியின் சிறப்புகள் குறித்த மாணவிகள் சிறப்புரையாற்றினர் தொடர்ந்து மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு

செஞ்சி ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிளக்கு பூஜை திருவிழா