in

சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலிதேவர் 309வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் – வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் எம் பி எம் எல் ஏக்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலிதேவர் 309வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் அவரது அரண்மனையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் – வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் எம் பி எம் எல் ஏக்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்சேவலில் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலிதேவர் அரண்மனையில் அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது…

இந்திய தேசத்தில் முதற்கட்ட முன்னோடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான குறுநில மன்னர்கள் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டனர்..
இதில் சிவகிரி வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டும்செவ்வயலில் ஆட்சி புரிந்து வந்த பூலிதேவர் வெள்ளையரை எதிர்த்து போரிட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டார்…

இந்நிலையில் அவரது சொந்த ஊரான நெற்கட்டும் சேவலில் அமைந்துள்ள அரண்மனை வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது முழு திருவுருவ சிலைக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே கே எஸ் ராமச்சந்திரன் எம் பி ராணி ஸ்ரீகுமார் எம்எல்ஏ ராஜா மற்றும் அரசுஅதிகாரிகள் ஆட்சியாளர்கள் கட்சித் தலைவர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்த்த பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .

முன்னதாக போலி தேவரின் ஏழாவது வாரிசான ராணி கோமதி முத்து துரைச்சி அவரது குடும்பத்துடன் பால்குட ஊர்வலமாக வந்து பூலி தேவரின் திருவுருவ சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்

பூலி தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டு இரண்டாம் தேதி மாலை 6 மணி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட எல்லையிலும் முக்கிய இடங்களிலும், 15 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

மேலும் வாசுதேவநல்லூர்,சங்கன்கோவில்க்கு உட்பட்ட அரசு மதுபான கடைகள் இன்று ஒருநாள் மட்டும் 26 கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது..

What do you think?

புதுச்சேரி அகரம் அரசு ஆரம்ப பள்ளியில் பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவம்

வாழை திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை மக்களுக்கு தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் தவற விட்டுவிட்டார்.