தருமபுரம் ஆதீன மடாதிபதியின் 60 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் 1500 பேருக்கு விலையில்லா புத்தாடைகளை மடாதிபதி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் அமைந்துள்ள சைவ ஆதீன திருமடத்தின் 27 வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60 ஆவது அவதார தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு ஆதின மடத்தில் சூரியனார் கோவில் ஆதீன மடாதிபதி, கோவை காமாட்சிபுரி ஆதீன மடாதிபதி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஆதீன மடாதிபதிகள் நேரில் வந்திருந்து ஆசி பெற்றனர்.
தொடர்ந்து ஆதின கலையரங்கங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட குருஞானசம்பந்தர் மழலையர் தொடக்கப்பள்ளி கன்யானத்தம் பள்ளி, திருக்கடையூர் ஆதீன பள்ளி ஆகியவற்றில் பயிலும் 1500 மாணவ மாணவிகள் மற்றும் மடத்தில் வேலை செய்யும் சிப்பந்திகள் ஆகியோருக்கு புத்தாடைகளை குருமாக சன்னிதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் சுசீந்திரன் அறக்கட்டளை நிறுவனர் சௌந்தர்ராஜன், பள்ளி நிர்வாகிகள் ஸ்ரீராம் மற்றும் சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.