விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா புதுச்சேரி யின் மணக்குள விநாயகர் கோயிலில் தொடர்ந்து ஒருவாரம் நடைபெறுகிறது. இதில் மாலையில் தினமும் கலை நிகழ்ச்சிகளும் ஆன்மீக சொற்பொழிவும் நடைபெற்று வருகிறது.
இதில் நாட்டிய சக்கரா மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாணவியருக்கு புதுச்சேரியின் முன்னாள் மாவட்ட ஆட்சியரான அபூர்வா கார்க் நினைவு பரிசினை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் நாட்டிய சக்கரா பள்ளியின் ஆசிரியை கிருத்திகா ரவிச்சந்திரன், கோயில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.