in

திருச்சியில் அரசியல் பிரமுகர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்


Watch – YouTube Click

திருச்சியில் அரசியல் பிரமுகர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் – ஊராட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி எட்டரை பகுதிக்கு விரைந்தனர்.அங்கே அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் பணம் இருப்பதாக தகவல் வந்தது. வீட்டிற்குள் புகுந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்பொழுது ஒரு பையில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தினர். அரசியல் பிரமுகர் அதிமுகவை சேர்ந்தவர். எட்டரை பஞ்சாயத்து தலைவர் திவ்யா அன்பரசன் என்பது விசாரணையில் தெரிந்தது.

மேலும் எதற்காக ஒரு கோடி ரூபாய் இவர் வீட்டில் வைத்துள்ளார் தேர்தல் பணம் பட்டுவாடா செய்ய இருந்த பணமா என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தம்பி அன்பரசன் என்பவரது மனைவி திவ்யா அன்பரசன் தற்போது ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்
அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு ஒரு கோடி வரை பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்

முசிறி வழியாக அன்பரசன் காரில் வந்தபோது காவலர்கள் அன்பரசனின் காரை மறித்து அன்பரசனை தற்போது முசிறி காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர், முசிறி காவல் நிலையம் முன்பு அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் பறக்கும் படையினர் ஒரு கோடி ரூபாயை பறிமுதல் செய்ததால் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம்.

தொடர் விசாரணை வருமான வரித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். திவ்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒரு கோடி ரூபாய் பணம் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாக திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

தேர்தல் விதிகளுக்கு முரணாக உள்ள வேட்பாளர் ஜோதிமணி சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு