in

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் பயிற்சி

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கைம்பெண்கள் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் ஒரு நாள் கருத்தரங்கம் பயிற்சி நடைபெற்றது 

திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கைம்பெண்கள் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள், ஒரு நாள் கருத்தரங்கம் பயிற்சி மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா தலைமையில் நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை எல்லா பெண்களுக்கும் வழங்கப்படுவதாகும் இந்தியாவில் தமிழகத்தில் தான் நமது முதல்வர் வழங்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.

இதில் கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டார பெண்களுக்கு சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண நிதி உதவி திட்டங்கள், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குறைந்த திட்டம், திருநங்கைகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், இலவச தையில் இயந்திரம் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் செயல்படும் மற்றும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீப்பன், பெண்கள் பாதுகாப்பு அலுவலர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

இலவச அனுமதி வழங்க வேண்டி செஞ்சி நகர வியாபாரிகள் ஊர்வலம்

அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்